இவ்வருடம் கைதான இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 500 ஐ அண்மித்தது – கடற்படை தெரிவிப்பு!
Monday, November 25th, 2024
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய கருத்து வௌியிடுகையில், 66 மீன்பிடி படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்நாட்டு மீனவர்களின் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு கடற்படை அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
000
Related posts:
சுலைமான் கொலை : GPS தொழில்நுட்ப விசாரணைக்கு நீதிமன்று உத்தரவு!
O/L பெறுபேற்று வீதத்தை அதிகரிக்க விசேட திட்டம் - கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் !
தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் - ஜனநாயகம் மற்றும் நீதி...
|
|
|


