இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்!
Monday, December 22nd, 2025
……
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதியாக ஜெய்சங்கர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிற உயர் அரசாங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பயணம், இலங்கையில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசின் ஆதரவை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
00
Related posts:
பிராந்திய விமானத்தளமாக மாறவுள்ள பலாலி விமானத்தளம்! - இந்தியா ஆய்வு!!
எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும்!
எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் பூட்டு!
|
|
|


