இலங்கையில் 29 சதவீதமான பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக தகவல்!
Wednesday, March 19th, 2025
இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 சதவீதமான பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இந்த விடயம் 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சுகாதார ஆய்வறிக்கையானது, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 71 வீதமானோர் பாடசாலைக்கு செல்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 29.3 வீதமானோர் அதிக எண்ணெய் கலந்த உணவை பெற்றுக் கொள்வதுடன் 40.9 வீத மாணவர்கள் நாளாந்தம் அதிக சீனி கலந்த உணவுகளை உட்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது
000
Related posts:
|
|
|


