இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் – மீள் பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில்!
Sunday, January 5th, 2025
இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 சதம் டொலர் வீதம் செலுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது.
குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
22 அரச நிறுவனங்களை கோப் குழு முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை!
பாகுபாடற்ற சமூகத்தை கட்டியெழுப்பு வதனூடாகவே சமூகங்களில் மாற்றங்களை உருவாக்கமுடியும் - ஈ.பி.டி. பியின...
மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு – சிறப்பு பூசை வழிபாடுகளுக்கும் ஏற்பாடு!
|
|
|
மாதகல் கடற்பரப்பில் பொலிஸ் காவலரண் வேண்டும் - ஈ.பி.டி.பியின் வலிதென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் அ...
ஓய்வுபெற்று வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் - அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 13,000 வெற்றிடங்களுக்கு ப...
பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் பக்தி பூர்வமாக. இடம்பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ ப...


