இலங்கையின் போக்குவரத்து சேவையில் பெண்கள்!
Friday, March 7th, 2025
இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவித்துள்ளார்..
இன்று (7) நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“நாளை (8) கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு எமது அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநர்களாக, ரயில் சாரதிகளாக, பாதுகாவலர்களாக பெண்களை இன்னும் சில நாட்களில் பார்க்க முடியும். நாளைய மகளிர் தினத்திற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேபோல், பாடசாலை பஸ்களை பெண்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கனவும் உள்ளது௪” என்று கூறினார்.
000
Related posts:
அதிகரிக்கும் செலவீனம் : சிறுதானியப் பயிர்ச் செய்கை கண்டாவளையில் வீழ்ச்சி !
நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய நடவடிக்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்!
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளைமுதல் மீண்டும் பணிக்கு!
|
|
|


