இரவு வேளைகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசேட ஆலோசனை!
Thursday, December 26th, 2024
இரவு வேளைகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர்கள், வாகனங்களை நிறுத்தும் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் பதில் காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இரவு வேளைகளில் வாகனங்களை நிறுத்தும் போது போக்குவரத்து கடமையில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர்கள் வாகன சாரதிகளுக்கு ஒளி பிரதிபலிக்கும் கையுறை உள்ளிட்ட ஆடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் காவல்நிலையங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு மின்விளக்குகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும் - சபாநாயகர்!
கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் பிரித்தானிய நிறுவனம முதலீடு!
வடமராட்சி கிழக்கை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றா? - சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமத...
|
|
|


