இன்றும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடை – அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு!
Thursday, February 13th, 2025
இன்றும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
இதனிடையே, பௌர்ணமி தினமான நேற்றையதினம் சுழற்சி முறையிலான மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின்பிறப்பாக்கிகளும் செயலிழந்துள்ள நிலையில் அவற்றைச் சீர் செய்து தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது
000
Related posts:
பிரான்ஸ் பெண் பலி!
வாடகை அடிப்படையிலான கட்டடங்களை அமைச்சுகளின் பாவனைகளுக்கு பெற்றுக்கொள்ள - ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித...
உயிர்த்த ஞாயிறு வழக்கு - 15 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!
|
|
|


