இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கான தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு!
Thursday, April 3rd, 2025
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்தப் பயணம் நடைபெறுகிறது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளிலும் நான் கலந்துகொள்ளவுள்ளேன். என அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்
Related posts:
இலக்குத் தகடற்ற வாகனங்கள் ஏ 32 வீதியில் பயணிக்கின்றன - மக்கள் கவலை!
நயினாதீவில் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது - நீதி அமை...
|
|
|


