இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது – வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைப்பு!

Friday, May 16th, 2025

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குச் சென்ற நிலையில் , இந்தியக் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு , மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நால்வரும் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகத் திரும்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் புகுந்த நால்வரையும் , அவர்களை அழைத்து வந்த படகோட்டிகளையும் கைது செய்து, வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

000

Related posts:


வடக்கு கிழக்கில் பெண்களை உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா - கிளிநொச்சியில் யாழ் மாநகர...
கொவிட் பரவல் முற்றாக நீக்கவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்து தமது நாளாந்த கடமைகளை முன்னெடுக்க வேண்...
பொலிஸ் காணி அதிகாரம் என பிழையான மனோரீதியான பிரச்சினைகளை மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் உருவாக்கிவரு...