இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று – செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய பிரதமர் மோடி!

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.
75 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு கலங்கரை விளக்கம் போல் தமக்கு பாதையை காட்டி வருவதாகவும் மூவர்ணக்கொடி என்பது வெறும் கொடி அல்ல, அது நாட்டின் பெருமை எனவும் இந்தியப் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒழிக்க இந்திய இராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும் பயங்கரவாதத்திற்குப் பண உதவி செய்தவர்களும் அழித்து ஒழிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயாது என்றார்.
2047 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் அணு சக்தி திறன் 10 மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
000
Related posts:
|
|