ஆளுநர் உத்தரவாதம் – இ.போ.சா இணக்கம் – கைவிடபட்டது சேவை முடக்கல் போராட்டம்!
 Monday, June 30th, 2025
        
                    Monday, June 30th, 2025
            
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதிவழங்கியதன்  அடிப்படையில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கவிருந்த சேவை முடக்கல் போராட்டம்  தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக  வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெவிக்கையில் –
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் நாளையதினம் செவ்வாய்க்கிழமை வடக்கில் சேவை முடக்கல் போராட்டம் இடபெறும் என கடந்தவாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இ.போ.சபை, வடக்கின் ஆளுநர் மற்றும் துறைசார் தரபினர் இனிவருங் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென்று வழங்கிய உத்தரவாதத்துக்கு அவைய குறித்த போராடம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
முன்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனிதார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து  பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.
ஆனாலும் இச்சட்டவிரோதம் குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்தப்பட்டது
ஆனலும் எந்தவொரு தீர்வுக் கிடைக்காத நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் ஆளுநர், இ.போ.சபை, பொலிசார் இவ்விடையம் தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக இ.போ.ச சட்ட விரோத சேவையை இடை நிறுத்தியுள்ளது.
அத்துடன் இணைந்த சேவை தொடர்பிலும் வரவுள்ள நாள்களில் இரு தரப்பினருடனும் கலந்து பேசி தீர்வை காண முயற்சிப்பதாகவும் எமக்கு உறுதி தந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் மக்களின் இயல்பு நிலையை சீர் குலைவதை தவிர்க்கும் வகையில் சேவை முடக்கல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதி என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        