அறிவிப்பாளர் மீது தாக்குதல் – குருநகரில் சம்பவம்!

Sunday, August 3rd, 2025


….
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு , திரும்பிய அறிவிப்பாளர் மீது கும்பல் ஒன்று தாக்குதலை நடாத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கானவர் தெரிவிக்கையில் ,

உதைப்பந்தாட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு வெளியேறிய போது, குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் தலைமையில். வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபர் உள்ளிட்ட கும்பல் என் மீது மூர்க்க தனமாக தாக்குதல் நடாத்தியதுடன், நான் அணிந்திருந்த “பாடு மீன்” விளையாட்டு கழகத்தின் உத்தியோகபூர்வ ஆடையையும் கிழித்துள்ளார்கள்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு என் மீது தாக்குதல் நடாத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Related posts:

கடந்த ஆண்டு இலங்கைக்கு மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான ...
1980 ஆண்டுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின்படி 75 சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ள...
அமுலுக்கு வந்த போர் நிறுத்தம் - இஸ்ரேல் நெட்சாரிம் வழித்தடத்தின் ஊடான ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ...