அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பம் – தேர்தல் ஆணைக்குழு !
Friday, February 28th, 2025
2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (28 ) ஆரம்பிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று (27) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாகச் சின்னங்கள் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப பத்திரம் இன்று முதல் மார்ச் மாதம் 28 ஆம் திகதி மாலை 3.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்பலாம் என்றும் அல்லது சம்பந்தப்பட்ட கட்சி செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
000
Related posts:
ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!
எவ்வித அச்சமும் இல்லை - கபீர் ஹசீம்!
நாடாளுமன்றத் தேர்தல் - பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிசார் சேவையில்!
|
|
|


