அரசத் ஊழியர்களின் எண்ணிக்கையை சீர் செய்வது அவசியம் –  உலக வங்கி அறிவுறுத்து!

Wednesday, October 8th, 2025


………
சக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வேதன மட்டம் குறைவாகவும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் சாக்ஸியன் தலைமையிலான குழுவினர், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், அரசத் ஊழியர்களின் எண்ணிக்கையை சீர் செய்து மொத்த உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் உலக வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை அதிக மின்சார செலவுகளைச் சந்தித்து வருகிறது.

இந்தநிலையில், வலுசக்தித் துறையில் உடனடியான மறுசீரமைப்புகள் அவசியம் எனவும் உலக வங்கியின் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
0000

Related posts:

இந்திய கடன் திட்டத்தின் கீழ் சதொச ஊடாக இன்றுமுதல் 145 ரூபாவுக்கு அரிசி - வர்ததக அமைச்சு அறிவிப்பு!
அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30 வீதத்தால் குறைந்துள்ளது - தம்புள்ளை மொத்த வியாபாரிகள் சங்கம் ...
வறட்சியான காலநிலையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சி - மக்களின் நீர் பாவனை அதிகரிப்பு - கா...