Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_5f79f2e1bc08cdcbf8671e9152a0414e, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
அமெரிக்க கடற்படையை  இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்! - EPDP NEWS

அமெரிக்க கடற்படையை  இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்!

Wednesday, June 10th, 2026

மேற்கு ஆசியாவில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் 5 வது படைப்பிரிவு தலைமையகத்தை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் 5 ஆவது படைப்பிரிவு தலைமையகம் அமைந்துள்ள பஹ்ரைனின் ஜுபைர்   பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த தாக்குதலின் போது பல ஏவுகணைகள் வான்வெளியிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து பஹ்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாகச் செயல்பட்டு, உள்நுழைந்த ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தின. இதன்போது ஏற்பட்ட பெரும் வெடிச்சத்தங்கள் அப்பகுதி முழுவதும் கேட்டுள்ளன.

பெரும்பாலான ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட போதிலும், அமெரிக்க கடற்படைத் தளத்தின் அருகிலோ அல்லது அதன் வளாகத்திற்குள்ளோ குறைந்தது இரண்டு ஏவுகணைகள் அல்லது அவற்றின் பாகங்கள் விழுந்து தாக்கியதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மற்றும் சமூக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

000

Related posts: