அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி   – இலங்கைக்கு வரிக் கடிதமொன்றை அனுப்பிய அமெரிக்கா!.

Thursday, July 10th, 2025

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரியை நிர்ணயித்து அமெரிக்கா வரிக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இதேநேரம் அமெரிக்காவுக்கு எதிராக இலங்கை தமது வரியை அதிகரிப்பதற்குத் தீர்மானித்தால், அதற்கு நிகராக தங்களின் 30 சதவீதம் என்ற புதிய வரி அதிகரிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் 30 சதவீத புதிய வரியை அறிவித்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நேற்று ட்ரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் அதில், இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உறவுகளைப் பொறுத்து, கட்டணங்களை ‘மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி’ சரி செய்ய முடியும் என்பதையும் ட்ரம்ப் தமது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

000

Related posts: