அமெரிக்காவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது – புடின்!

…….
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் சீனாவும், இந்தியாவும்தான் உக்ரைன் போருக்கு ‘முதன்மையான நிதியளிப்பாளர்கள்’ என்று குற்றம் சாட்டினார்.
இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற வல்தாய் கலந்துரையாடல் குழுவின் அமர்வில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின், ‘ரஷ்ய கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தும்படி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகளைக் கண்டிக்கிறேன்.
இந்தியா அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாது. யாரிடமும் தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்ளாது.
பிரதமர் மோடி சமநிலையான மற்றும் புத்திசாலித்தனமான தலைவர். இந்திய மக்கள், தங்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். யாரிடமும் அவமானப்படுவதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
எனக்கு பிரதமர் மோடியைத் தெரியும்; அவர் ஒருபோதும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க மாட்டார். இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது முற்றிலும் பொருளாதாரக் கணக்குகளுடன் தொடர்புடையது. இதில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
0000
Related posts:
|
|