அமெரிக்கப் பொருட்களுக்கு 20 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரிகளை விதித்த கனடா!
Thursday, March 13th, 2025
அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலளிக்கும் வகையில், கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 20 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரிகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இவ்வாறான வரிகளில், 12.6 பில்லியன் டொலர்கள் வரியை விளையாட்டு பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுக்கு விதித்துள்ளது.
அத்துடன், உணவுப்பொருட்கள், எரிபொருள் என்பவற்றின் விலைகள் குறைக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள அனைத்து வரிகளையும் நீக்கும் நோக்கத்துடன், எதிர்வரும் இரண்டாம் திகதி வரை அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக கனடாவின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கைது!
அரச ஊழியர்களிடம் அதிகபட்ச சேவையினை பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் - விசேட ஆய்வொன்றை முன்னெடுக்கும...
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவி...
|
|
|


