அமுலுக்கு வந்த போர் நிறுத்தம் – இஸ்ரேல் நெட்சாரிம் வழித்தடத்தின் ஊடான ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கிச் செல்வதாகத் பயணம்!

Tuesday, January 28th, 2025

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், இஸ்ரேல் நெட்சாரிம் (Netzarim) வழித்தடத்தின் ஊடான பாதைகளைத் திறந்த பின்னர் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்மதியினூடாக எடுக்கப்பட்ட படங்களில் கடலோரப் பாதையினூடாக காசா நோக்கிப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் செல்லும் காட்சிகள் காட்டப்பட்டன.

ஆனால், மகிழுந்துகளில் பயணிக்கும் மக்கள் சோதனைச் சாவடிகளின் ஊடாக காசாவிற்கு செல்ல பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப், பாலஸ்தீனியர்கள் ஜோர்தான் மற்றும் எகிப்தில் மீள்குடியேற்றப்படும் வகையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த பரிந்துரையினை சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமல்லாமல் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளும் நிராகரித்துள்ளன

000

Related posts: