அமரர் கணபதிப்பிள்ளை பாக்கியத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி எலுத்திய செயலாளர் நாயகம்!

Friday, May 22nd, 2026


….
அமரர் கணபதிப்பிள்ளை பாக்கியத்தின் பூதவுடலுகு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

வயது மூப்பின் காரணமாக கடந்த 20 ஆம் திகதி தனது 92 வயதில் காலமான அமரர்
கணபதிப்பிள்ளை பாக்கியத்தின் பூதவுடல்
யாழ்ப்பாணம் அத்தியடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படிருந்த நிலையில், அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் பூதவுடலுக்கு தனது அஞ்சலியை செலுத்தியதுடன் அமரரது உறவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

இதன்போது செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா,  கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் இளங்கோ மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து அமரருக்கு தமது இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தமை  குறிப்பிடத்தக்கது

Related posts: