அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை – கல்வி அமைச்சு!
Friday, November 22nd, 2024
2024ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (22) நிறைவடைகின்றன.
இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.
இதன்படி, அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
000
Related posts:
இனவாதத்தை தூண்டுபவர்களை கைது செய்ய ஜனாதிபதி உத்தரவு!
இலங்கை வருகின்றார் ஜெர்மனிய நாடாளுமன்ற தலைவர்!
4,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை!
|
|
|


