அனுபவமும் ஆளுமையும் உள்ளவர்களே மக்களின் தெரிவாக அமைய வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !
Tuesday, April 29th, 2025
…….
உறவினர்கள், ஊரவர்கள் என்ற அடிப்படையில் அல்லாமல், அனுபவமும் ஆளுமையும் உள்ளவர்களே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்களின் தெரிவாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே குறித்த தகுதிகளை கடந்த காலங்களில் வெளிப்படுத்திய ஒரே தரப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சாவகச்சேரி, கச்சாய் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் சாவகச்சேரி பிரதேச அமைப்பாளர் தோழர் மெடிஸ்கோ, உதவி அமைப்பாளர் தோழர் தர்ஷன் மற்றும் சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபை ஆகியவற்றின் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
முன்பதாக யாழ், கொட்டடி பிரதேசத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, அந்தப் பகுதியில் போட்டியிடுகின்ற மாநகர சபை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து கற்குளம் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மங்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தினார்.
000
Related posts:
|
|
|


