அதிகாரிகளின் அசமந்தப் போக்கு – யாழில் மண்கலந்த நீர் விநியோகம்!

Tuesday, January 28th, 2025

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது –

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய் மூலமான நீர் வழங்கல் வீடுகளுக்கு வழங்கப்படுகின்றது

நேற்றையதினம் (27.01.2025) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் வீதியில் உள்ள வீடுகளுக்கு வளமையான குழாய் நீர் விநியோகிக்கப்பட்ட நிலையில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள நீர் தாங்கிகளில் குறித்த நீர் நிரப்பப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர் ஒருவர் நீரை போத்தலில் எடுத்த போது சிவப்பு நிறமாக குறித்த நீர் காட்சி அளித்ததை அவதானித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது, குழாய் நீரில் ஏற்பட்ட பழுது காரணமாக திருத்த வேலைகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது .

திருத்த வேலையின் போது மண் உட்பகுந்த காரணத்தினால் அருகில் இருக்கும் வீடுகளின் குடி நீரில் சிவப்பு மண் கலந்த நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரை தொடர்பு கொண்ட போது குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: