அஸ்வெசும நலன்புரி திட்டம் – பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிப்பு!

Thursday, November 28th, 2024

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு இந்த காலவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.

இதற்கு முன்னதாக 25.11.2024 முதல் 02.12.2024 வரை அஸ்வெசும நிவாரண பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை அஸ்வெசும நிவாரண பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்காத குடும்பங்கள் மற்றும் நபர்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

000

Related posts: