1 600 ரூபா தேங்காய்க்காக 2 000 ரூபா தலைக்கவசத்தை இழந்த ஆசாமி!

Friday, December 1st, 2017

தேங்காய் வாங்கச் சென்ற ஒருவர் 1,600 ரூபா பெறுமதியான தேங்காய்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காது சென்ற போது தனது 2,000 ரூபா பெறுமதியான தலைக்கவசத்தினை கடையில் மறந்து விட்டு சென்ற சம்பவம் அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நடுத்தர வயதுடைய நபரொருவர் மோட்டார் சைக்கிளில் கடையொன்றுக்குச் சென்று தேங்காய் வாங்குவதற்கு விலை கேட்டுள்ளார். இதன்போது கடை உரிமையாளரின் மனைவி தேங்காய் 85 ரூபா எனக் கூறினார். மதச் சடங்கு ஒன்றிற்கு தேங்காய் வேண்டும் 80 ரூபாவாக குறைத்துப் பேரம் பேசினார். பின்னர் 80 ரூபாவிற்கு சம்மதித்த நிலையில் தேங்காய்களை ஒரு உரப் பையினுள் கடை உரிமையாளரின் மனைவி போட்டு மோட்டார் சைக்கிளில் கயிற்றினால் கட்டிக் கொடுத்தார். இதையடுத்து இந்நபர் தனக்கு 5 கிலோ அரிசி வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதற்கு கடை உரிமையாளரின் மனைவி கடையில் அரிசி உள்ளே இருப்பதால் எடுக்கச் சென்றுள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்திய நபர் பையில் கட்டியிருந்த 20 தேங்காய்களுடன் பணத்தைக் கொடுக்காது மோட்டார் சைக்கிளில் ஓடியுள்ளார். இந்த அவசரத்தில் தனது மோட்டார் சைக்கிளின் தலைக்கவசத்தை மறந்து கடையில் வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். 20 தேங்காய்களை 1,600 ரூபாவிற்கு வாங்கி விட்டு பணத்தைக் கொடுக்காது ஓடியவர் 2,000 ரூபா பெறுமதியான தனது தலைக்கவசத்தை இழந்துள்ளார்.

Related posts: