குறுகிய காலத்தில் கடலோர பாதுகாப்புப் படையினர சாதனை!  

Wednesday, January 25th, 2017

இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்பு நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் சுமார் 800 உயிர்களை பாதுகாத்தது எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடுமுழுவதும் முக்கிய கடற்கரையோரங்களில் அமைந்துள்ள உயிர்காப்பு பிரிவுகளின் மூலம் கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பாளர்கள், கடலில் மூழ்கிய சுமார் 482 உள்ளூர் மற்றும் 318 வெளிநாட்டு பிரஜைகளை பாதுகாத்துள்ளதுடன் தற்போது கடலோர பாதுகாப்பு படையின் 196 நிபுணத்துவம் வாய்ந்த உயிர்காப்பாளர்கள் மேற்படி உயிர்காப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை கடலோர பாதுகாப்பு படை நாடுமுழுவதும் 13 உயிர்காப்பு நிலையங்களை நிறுவி பராமரித்து வருகின்றது.பலபிட்டியவில் அமைந்துள்ள உயிர்காப்பு பயிற்சிப் பாடசாலையின் மூலம் நிபுணத்துவம் வாய்ந்த உயிர்காப்பாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்புப் பிரிவு 2009ஆம் ஆண்டு தனது நடவடிக்கைகளை ஆரம்பித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மிரிஸ்ஸ கடற்பரப்பில் மூழ்கிய கொரிய நாட்டுப் பிரஜையான திரு. ஜோஹோங் சியொக் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டார். இவரே இப்பிரிவினரால் காப்பாற்றப்பட்ட முதலாவது வெளிநாட்டுப் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது

e6af2db3b6073e3d601f12b6d1ff9a58_XL

Related posts: