வாகன விபத்தில் இரு வெளிநாட்டவர் பலி!
Friday, August 11th, 2017
காலி – மாத்தறை பிரதான வீதியின் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு தம்பதி உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து இன்று மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஷ்ய நாட்டு தம்பதியினரே உயிரிழந்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய பஸ் வண்டி சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பஸ் வண்டி சாரதியை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
லொத்தர் சபை முகவர்களின் விவகாரம்: ஒப்பந்தம் இடைநீக்கம்!
கடந்த வருடம் 107 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் - 502 பேர் பலி!
வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி - வடக்கு மாகாண சுகாதாரத் த...
|
|
|


