கடந்த வருடம் 107 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் – 502 பேர் பலி!

Thursday, June 22nd, 2017

இலங்கையில் கடந்த வருடத்தில் 107 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் 502 கொலைகளும் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதாள குழு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தான் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்வதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 317 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் 1526 கொலைகள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.2014ஆம் ஆண்டில் 112 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் 548 கொலைகளும் பதிவாகியுள்ளது.2015ஆம் ஆண்டு 98 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் 476 கொலைகளும் பதிவாகியுள்ளது. அத்துடன் 2016 ஆம் ஆண்டு 107 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் 502 கொலைகளும் பதிவாகியுள்ளதென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: