ரஷ்யாவின் உறவை முறித்துக்கொள்வது அர்த்தமற்றது – டில்லர்சன்!
 Tuesday, August 8th, 2017
        
                    Tuesday, August 8th, 2017
            அமெரிக்கா ரஷ்யாவுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கு விரும்புவதாகவும், ஒருசில கருத்து முரண்பாடுகள் காரணமாக ரஷ்யாவுடனான உறவை முறித்துக் கொள்வது அர்த்தமற்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
டில்லர்சன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்திருந்து நிலையில், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவித்த இராஜாங்க செயலாளர், ”ஒரு பிரச்சினைக்காக ரஷ்யாவுடனான உறவை முழுமையாக துண்டிப்பது பயனற்றதாகும். அமெரிக்காவும், ரஷ்யாவும் உலகின் மிகப்பெரிய நாடுகளாக விளங்குகின்ற நிலையில், இருவரும் இணைந்து செயற்படுவதே சிறந்ததாகும்.
எனவே, ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் ஆராய்வதற்கென சிறப்பு தூதுக் குழுவொன்றை நியமித்துள்ளோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவை புறந்தள்ளி செயற்பட நாம் முயற்சிக்கவில்லை” என்றார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        