மீண்டும் ஓரங்கட்டப்பட்டுள்ள அனுபவ வீரர்கள்!

சற்றுமுன்னர் ஒருநாள் போட்டிக்கான அணி விபரம் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாகவும் அஸ்வின், ஜடேஜா இருவரும் ஓய்வு எனும்பெயரில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவ்ராஜ், ரெய்னா ஆகியோருக்கும் சந்தர்ப்பம்வழங்கப்படவில்லை.
தென் ஆபிரிக்க அணியுடன் இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் குழாமில் ஜடேஜா மற்றும் அஸ்வின் உள்வாங்கப்பட்டிருந்தாலும், வளர்ந்துவரும் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களுக்கே மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
இதற்காக17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விபரம்.விராட் கோஹ்லி (தலைவர்),ரோஹித் சர்மா, தவான், ரஹானே,ஷ்ரேயஸ் ஐயர்,மனிஷ் பாண்டே,கேதார் யாதவ் ,தினேஷ் கார்த்திக், M.S.டோனி (wk), ஹர்டிக் பாண்டியா , அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், சஹால் , புவனேஸ்வர் குமார்,ஜஸ்பிரிட் பூம்ரா,மொஹமட் சாமி , ஷர்த்துல் தாகூர்
Related posts:
|
|