‘சுயநலத்துக்காக விளையாடும் வீரர்கள் அணிக்கு தேவையில்லை’ பாகிஸ்தான் புதிய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பேட்டி

Friday, May 13th, 2016

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் முதல் தர வீரர் மிக்கி ஆர்தர் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராக இருந்து இருக்கும் மிக்கி ஆர்தர் கண்டிப்புக்கு பெயர் போனவர். இந்த மாத இறுதியில் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க இருக்கும் மிக்கி ஆர்தர் அளித்த ஒரு பேட்டியில், ‘நான் ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்பானவன். அப்படி இருந்தால் தான் அணிக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும்.

அனைவரும் அணிக்காக விளையாடுவதையே நான் வலியுறுத்துவேன். சுயநலத்துக்காக விளையாடும் வீரர்கள் எனக்கு தேவையில்லை. பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சு நன்றாக உள்ளது.துடுப்பாட்டம் பெரிய அளவில் முன்னேற்றம் காண வேண்டும்களத்தடுப்ப மற்றும் உடல் தகுதி ஆகியவற்றில் கண்டிப்பாக நடந்து கொள்வேன்.

இந்த விடயங்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். நன்றாக தங்களை தயார்படுத்தி கொள்ளாத வீரர்கள் வசைபாடுதலை சந்திக்க தயாராக இருக்க வேண்டியது இருக்கும்’ என்றார்.

பாகிஸ்தான் அணி வரும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. சமீபகாலங்களில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் இல்லை என்பது நினைவுகூரத்தக்கது.

Related posts: