வாழ்நாளின் சிறந்த தருணம்: ரொனால்டோ மகிழ்ச்சி!

Monday, July 11th, 2016

போர்த்துக்கல் அணி யூரோ கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதால் அந்த அணியின் தலைவர் ரொனால்டோ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் 1-0 என பிரான்சை வீழ்த்தி முதன்முறையாக கிண்ணம் வென்றது.

இந்த வெற்றி குறித்து போர்த்துக்கல் அணியின் ரொனால்டோ கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தருணத்திற்காக தான் நீண்ட காலமாக, 2004ம் ஆண்டில் இருந்து காத்திருந்தேன்.

போர்த்துக்கல் அணி வீரர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். துரதிருஷ்டவசமாக எனக்கு சில விடயங்கள் சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் நான் எனது அணி வீரர்களை முழுவதும் நம்பினேன். அவர்களுக்கு தகுதியும் திறமையும் இருக்கிறது.

இது எனது வாழ்நாளின் சிறந்த தருணம். போர்த்துக்கல் அணிக்காக கிண்ணம் வெல்ல வேண்டும், வரலாறு படைக்க வேண்டும் என்பது எப்போதும் சொல்லும் ஒன்று தான்.

இது ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் கிடைத்த வெற்றி. இதை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.

Related posts: