இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ்!

Saturday, May 26th, 2018

கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில், ஹைதராபாத் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் தினேஷ் கார்த்திக் நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சு தெரிவு செய்தார்.

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடித்தாட முடிவு செய்தது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ஓட்டங்களாக இருக்கும்போது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் இதே ஓவரின் 5-வது பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ரன் ஏற்றத்தில் தடங்கல் ஏற்பட்டது. சகா(35), ஷாகிப் அல் ஹசன்(28), தீபக் ஹூடா(19), யூசுப் பதான்(3), பிராத்வைட்(8) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் விளாச சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19 ஓவர் முடிவில் 150 ஓட்டங்களைத் தொட்டது.

கடைசி ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை புவனேஸ்வர் குமார் பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான், 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார்.

5-வது பந்தில் 2 ரன்னும், கடைசி பந்தில் சிக்ஸரும் விளாச கடைசி ஓவரில் 24 ஓட்டங்கள் குவித்தது. இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் சேர்த்தது.

ரஷித் கான் 10 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ஓட்டங்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடைசி ஓவரில் 24 ஓட்டங்கள் குவித்ததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

இதனையடுத்து, 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க வீரர்களான லின் 31 பந்துகளில் 48 ஓட்டங்களும், நரேன் 13 பந்துகளில் 26 ஓட்டங்களும் சேர்த்து வெளியேறினர்.

பின்னர் வந்த ராணா 22 ஓட்டங்கள் குவிக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி சொதப்பினர்.

ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி, ஓட்டங்களை சேர்க்க முடியாமல் தவித்த நிலையில், இளம் வீரர் சுப்மன் கில் மட்டும் 20 பந்துகளில் 30 ஓட்டங்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார்.

அவரும் வெளியேற, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களை மட்டும் குவித்து, 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஹைதராபாத் அணியில், ரஷித் கான் 4 ஓவர்களில் 19 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை எடுத்து கலக்கினார்.

இந்த வெற்றியின் மூலம், வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறும் போட்டியில், ஹைதராபாத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

Related posts: