செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழர் பகுதி எங்கும் விஷேட பூஜை வழிபாடுகள்!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா இன்று தனது 60 ஆவது அகவையில் கால் பதித்துள்ளார்.
அவரது 60 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் அவரது கட்சியின் ஆதரவானர்களால் ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
குறிப்பாக வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கட்சியின் ஆதரவாளர்களால் பிரத்தியேகமாக விஷேட பூஷை வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்ப பூசைவழிபாடகள் நடைபெற்றுள்ளன.
Related posts:
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து - தொழிலாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்!
மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு -...
உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந...
|
|