கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து – தொழிலாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்!

Tuesday, October 18th, 2016

தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை 730 ரூபாவாக அதிகரிப்பதற்கான புதிய கூட்டு ஒப்பந்தம்  பெருந்தோட்ட உரிமையாளர்களின் சங்கம் மற்றும் தோட்ட சங்கத்திற்கு இடையில் சர்வதேச வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மூலோபாயம் அமைச்சகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

மேலும் 730ரூபா பணம் கையில் கிடைக்கும் என்றும் மிகுதிப் பணம் ஓய்வூதிய கொடுப்பணவுகளில் கொடுக்கப்படும் என்றும் மொத்தமாக 824 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

630 ரூபாவாக இருந்த நாளாந்த சம்பளத்தை 730 ரூபாவாக வழங்குவதற்கும், ஆறு நாள் வேலைக்கும் முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கத்தினரும் இணங்கி, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். எனினும் தமக்கு 1000 ரூபா சம்பளப்பணம் வேண்டும் என்று கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Closeup of male hand about to sign a business contract with a fountain pen.
Closeup of male hand about to sign a business contract with a fountain pen.

Related posts: