சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை அனர்த்தம் குறித்து மின்னஞ்சல்!
Monday, May 29th, 2017
இலங்கையில் அனர்த்த நிலைமை தொடர்பில் சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் Wáng Yì இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு அனுதாபச்செய்தி ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துள்ளதுடன் அவர்களது உறவினர்கள் மற்றும் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் சீன வெளிநாட்டலுவர் அமைச்சர் அனுப்பியுள்ள மின்னஞ்சல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் இடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு முடிந்தளவு ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா விருப்பம் கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையின் கீழ் இலங்கை மக்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து அவர்கள் குடியிருந்த பகுதிகளில் மீள இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் நம்பிக்கை கொள்வதாகவும் சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தனது மின்னஞ்சல் செய்தியில் குறிப்பிட்டள்ளார்
Related posts:
|
|
|


