அரச பணியாளரை பகிரங்க கூட்டத்தில் மிரட்டிய யாழ்ப்பாணத்து அரசியல்வாதியின் தந்தை – அதிர்ச்சியில் அரச அதிகாரிகள்!

Sunday, April 25th, 2021

யாழ் மாவட்டத்தில் அடாவடி அரசியலில் ஈடுபட்டுவரும் இளம் அரசியல்வாதிவாதி ஒருவரது தந்தையார் அரச அதிகாரி ஒருவரை பலர் முன்னிலையில் பகிரங்க கூட்டம் ஒன்றில் வைத்து தரக்குறைவாக திட்டி மிரட்டிய சம்பவம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இன்றையதினம் தனது செய்தியிடலில் பிரசுரித்துள்ளனது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் –

யாழ் மாவட்ட அரச அதிகாரிகளை தமது அடிமைகளாக வைத்திருக்க நினைக்கும் குறித்த அடாவடி அரசியல்வாதியும் அவரது தந்தையாரும் பல தடவைகள் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுவருவதை பல அரச உயர் அதிகாரிகள் சமூக நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் பகிரங்கமாகவே குறிறச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எவரும் கலந்துகொள்ளாத நிலையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு அலுவலகங்களில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அமைவாக கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் குறித்த இளம் அடாவடி அரசியல்வதாதியின் தந்தை முகநூலில் இருந்து எடுக்கப்பட்ட சில தகவல்களை காண்பித்துள்ளார்.

அதில் சங்கானை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரது முகநால் பதிவுகளில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதிவை மறுபதிவு செய்திருந்ததும், ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதிவொன்றின் கீழ் அவரை விமர்சிக்கும் பதிவொன்றையும் மேற்கொண்டிருந்தார்.

அவை தொடர்பான ஆதாரங்களை அச்சுப்பிரதி எடுத்து அவற்றை கூட்டத்தில் பகிரங்கமாக காண்பித்த குறித்த அரசியல்வாதியின் தந்தையார் கூட்டமைப்புக்காக வேலை செய்கிறாயா? உனக்கு தெரியாதா ளிட்ட பலரையும் இடமாற்றினோம். என்பதை நீ அறிந்திருக்கவில்லையா? நீ கவனமாக இருக்க வேண்டும் என பல கீழ்த்தரமான வர்த்தைகளை பிரயோகித்து சங்கானை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தரை மிரட்டியுள்ளார்.

இத்தகைய சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள யாழ்ப்பாணத்து அரச அதிகாரிகள் இவ்வாறான சம்பவங்கள் தொடருமாயின் அததகைய அசிங்கங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட நேரிடும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: