கண்ணி வெடி எதிர்ப்பு சாசன விசேட தூதுவர் இலங்கை விஜயம்!

இலங்கைக்கான விஜயத்தை ஒட்டாவா சாசனமான கண்ணி வெடி எதிர்ப்பு சாசனம் தொடர்பான விசேட தூதுவர் இளவரசர் மயர்ட் பின் ராட் பின் செயிட் அல் ஹுசைன் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் இந்த மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருப்பார்.
இலங்கை கண்ணி வெடிக்கு எதிரான சாசனத்தை அங்கீகரித்த 163வது நாடாக மாறுகின்ற நிலையில், அவரது விஜயம் அமைகிறது. இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும்பாதுகாப்பு, மீள்குடியேற்றம் போன்ற அமைச்சுகளின் செயலாளர்கள், பாதுகாப்பு படைத் தளபதிகள் மற்றும் கண்ணி வெடி அகற்றும் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோரை சந்திப்பார் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மாதம் 6ஆம் திகதி அவர் யாழ்ப்பாணம் – முகமாலை பகுதியில் இடம்பெறும் கண்ணி வெடி அகற்றும் பணிகளை பார்வையிடுவதற்காக அங்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
Related posts:
பிரான்ஸ் பெண் பலி!
யாழ். கலைஞர்களின் தயாரிப்பில் “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” திரைப்படம்!
நாளையதினமும் மின்தடை !
|
|