ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாசா நல்லடக்கத்தில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Sunday, October 16th, 2016
காலஞ்சென்ற ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாசா நல்லடக்கத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா பங்கெடுத்துக்கொண்டதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.
கொழும்பு யாவத்தை பள்ளிவாசலில் இன்றையதினம் இறுதி வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து ஆராதனையிலும் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றிருந்தார். ஆராதனைகளைத் தொடர்ந்து அன்னாரின் ஜனாசா குறித்த பள்ளிவாசலுக்கு அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காலஞ்சென்ற ஆதில் பாக்கீர் மாக்கார் நேற்றுமுன்தினம் இலண்டனில்காலமானார். அன்னார் தேசிய ஊடக மத்தியநிலையத்தின் பணிப்பாளரும் முன்னாள் அமைச்சரமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.






Related posts:
இளைஞர் பாராளுமன்ற தேர்தல்: யாழ்ப்பாணத்தில் பத்துப் பேர் போட்டி!
சட்டவிரோத மீன்பிடி - 07 பேர் கைது!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!
|
|
|


