ஜனாதிபதி – குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்கள்சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலர்கள் சங்கம் தமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியது.
குறித்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு, குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்குபடுத்தல் சேவை, அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு, வெளிநாட்டு தூதரக சேவையில் அதிகாரம் பெற்ற அலுவலர்களை இணைத்துக் கொள்ளுதல், பயிற்சி மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளை உற்பத்தித்திறனாக பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு தெரிவித்தனர்.இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சேவையை மேலும் மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
Related posts:
|
|