நக்கீரா முகநூல் சொல்லும்   வெளிவராத உண்மைகள்! பாகம் ஒன்று…….!

Friday, July 8th, 2016

டக்ளஸ் தேவானந்தாவிற்கு தகவல் அனுப்பிய பிரபாகரன்.!

1996 இல் தீவகம் தவிர்ந்த யாழ் குடா நாடு விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது சந்திரிகா ஆட்சிக்காலம்..  பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் அனுரத்த ரத்வத்த. புலிகளுடனான சமாதான பேச்சுக்கான முயற்சிகள் யாவும் முறிந்து போன நிலையில் யுத்தத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு அரசு தயாராக இருந்தது.

யாழ் குடாநாட்டை தமது பூரண கட்டுப்பாட்டில்  கொண்டுவருவதுதான் சந்திரிகா அரசின் திட்டம்.
அரசின் படை பட்டாளங்கள் பரிவாரங்கள் எல்லாம் தயார் நிலையில் இருந்தன. படை நகர்விற்கான பெரும் எடுப்பை அறிந்து கொண்ட புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு யோசனை பிறந்தது.

படையினரின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது  என முன்கூட்டியே உணர்ந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் பொட்டம்மானையும் நடேசனையும் அழைத்து பேசினார்.

தலைவர் பிரபாகரனின் திட்டத்தோடு புறப்பட்டனர் பொட்டம்மானும் நடேசனும்.
அப்போது புலிகளின் காவல் துறைக்கு பொறுப்பாக இருந்தவர்தான் நடேசன். யாழ் பழைய பூங்காவில் இருந்தது புலிகளின்  காவல் நிலையம்.

தலைவர் இட்ட கட்டளையை ஏற்று புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மானும் காவல்துறை பொறுப்பாளர் நடேசனும் அந்த காவல் நிலையத்தில் சந்தித்தனர்.

அப்போது ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஒன்பது ஆசனங்களோடு அப்போது ஈ.பி.டி.பி இருந்தது. புலிகளின் தலைவர் சொன்ன தகவலை கொழும்பில் இருந்த ஈ.பி.டி.பி தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

அதற்கு யாரை தூதனுப்பலாம் என்று யோசித்த பொட்டம்மானும் நடேசனும் இருவரை தெரிவு செய்தனர். அந்த இருவரையும் அழைத்துவருமாறு புலிகளின்  உறுப்பினர்கள் அனுப்பபட்டனர்.

தூது போக இருந்த அந்த இருவரும் யார்?.. அனுப்ப இருந்த தகவல் என்ன?… விடைகளோடு மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்……!

நன்றி – நக்கீரா முகநூல்.

உண்மைகள் தொடரும் …….!

Related posts: