தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர்- “ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்” – தொடர். 06   

Wednesday, April 20th, 2016

1990 ஆண்டு நடுப்பகுதியளவில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் இலங்கை திரும்பிய போது அவரை பாதுகாப்பாக அழைத்து வந்து தனது வீட்டிலேயே தங்க வைத்தும் உதவியவர், கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் என்பதும், அவரது வீட்டு விலாசத்திலேயேதான் ஈ.பி.டி.பி கட்சியின் பதிவு விலாசமுமாகவும் இருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

அப்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை பதிவு செய்வது, தோழர்களை ஒன்றினைப்பது, கட்சிப் பணிகளை வகுப்பது போன்ற முக்கிய பணிகளில் ஈடுபட்டவர்களில், தோழர்களான அசோக்;, ஆனந்தன், திலக், பாரத், அன்பர் போன்றவர்களை குறிப்பிட்டுக் கூறலாம். அதேகால கட்டத்தில் திருகோணமலைக்கு தோழர்களான உதயன், வரதராஜன் அங்கிள் ஆகியோர் அனுப்பப்பட்டிருந்தார்கள்.

தீவகத்திற்கு தோழர் ஆனந்தன் தலைமையிலான தோழர்களும் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
பாரத லக்ஷ்மன் அவர்கள் அந்த உதவியைச் செய்வதற்கு முன்வந்ததற்கு காரணம், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தந்தையும், பாரத லக்ஷ்மன் அவர்களின் தந்தை பிரேமச்சந்திரா அவர்களும் தொழிற்சங்க நண்பர்களாகவும், குடும்ப நண்பர்களாகவும் பழகியவர்கள் என்பதேயாகும்.

இதையே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 1986 நடுப்பகுதிக்கும் 1990 நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதில் இலங்கை மண்ணில் நடைபெற்ற நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் தனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தச் சம்மந்தமுமில்லை என்று அடிக்கடி கூறுவார்.

ஆனால் விடுதலைக்கானதும், அரசியல் உரிமைகளுக்குமான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தியவர்களில் தானும் ஒருவர் என்றவகையில் போராட்டத்தின் பெயரால் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களிலிருந்து அவர்களை மீட்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு தனக்கும் உண்டு என்றும் கூறுவார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பணிகள் என்பது, ஒரு பக்கம் சிங்கம் (இலங்கைப் படைகள்) மறுபக்கம் புலி (புலிகள் இயக்கம்) இவர்களுக்கிடையே அகப்பட்டுத் தவிக்கும் மக்களை அதிலிருந்து மீட்டுக் கரை சேர்ப்பதாகும் என்று வகுத்துக் கொண்டார்.

13010733_1536468603316232_1655674741806799142_n

அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வைக்காண்பதற்காக அரசியல் போராட்டம் ஒன்றை கடினமான பாதையில் முன்னெடுக்கும் அதேவேளை மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் விரைந்து பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மாறி மாறி வந்த தென் இலங்கை அரசுகளோடு பேச்சுக்களை நடத்தினார். இந்த இடத்தில் ஒன்றை அரசியல் போக்கைப்பற்றியும் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாக இருக்கும்.

அதாவது டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசுகளுடன் நடத்திய இணக்க அரசியலானது, தமிழ் மக்களின் நலன்களுக்கானதாகவும், அழிந்த தாயகத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவதற்காகவுமேயாகும். ஆனால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தும் இணக்க அரசியலானது தனி நபர் பெருமைகளுக்கானதாகவே.

அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காகவும், பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தவிசாளர் பதவிக்காகவும், மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைமைப் பதவிகளுக்காகவுமேயாகும்.

இந்தப் பதவிகளில் இருக்கின்றவர்கள் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க எதையும் செய்யவில்லை. மக்களின் பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் காது கொடுத்துக் கேட்கவும் தயாராக இல்லாத நிலைமையே இன்றுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசுகளுடன் கொண்டிருந்த இணக்க அரசியல் அணுகு முறை காரணமாகத்தான், யுத்தம் நடந்த போதும், வடக்கிற்கும், தெற்கிற்கும் பாதை அடைக்கப்பட்ட போதும், அங்கொரு பட்டினிச்சாவு இடம்பெறாமல் மக்களைக் காத்து.

அப்பாவி மக்கள் பலியாகமல் பாதுகாக்கப்பட்டார்கள்.
அக்கால கட்டத்தில் மருத்துவ தேவைகளுக்காகவும், வெளிநாடுகளிலுள்ள தமது உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் வடக்கிலிருந்து தெற்குக்கு வருகை தருவதற்கு அவசியம் இருந்தபோதும், போக்குவரத்துகள் முற்றாக தடுக்கப்பட்டிருந்தன.

யாழ்.குடா நாட்டில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரின் மக்கள் சேவைகள் வியாபிக்கத் தொடங்கியதை அடுத்து, கொழும்பிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்து வந்த தீவகத்தைச் சேர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பி தீவகத்திற்கு வருவதற்கும் விரும்பியிருந்தார்கள்.

இவ்வாறு தீவகத்திலிருந்து வெளியில் செல்வதற்கும், வெளியிலிருந்து தீவகத்திற்கு வருவதற்கும் பயண ஏற்பாடுகளை செய்துதருமாறும், தொலைபேசி வசதியை ஏற்படுத்தித் தருமாறும் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.

மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து ஜனாதிபதி பிறேமதாசா அவர்களுடனும், பாதுகாப்பு அமைச்சரான ரஞ்சன் விஜேயரத்தினா அவர்களுடனும் கலந்துரையாடி கடற்படையினரின் கப்பல்களில் பொது மக்கள் பயணம் செய்வதற்கு இணக்கத்தை ஏற்படுத்தியதோடு, அவசர சிகிச்சைக்காக கொழும்புக்கு நோயாளிகளை கொண்டு செல்வதற்கும், சிகிச்சையின் பின் மீண்டும் திரும்பி வருவதற்கும் இலங்கை விமானப்படையினரின் விமானங்களில் ஒரு ஏற்பாட்டையும் பெற்றுக் கொண்டிருந்தார்.

இந்த ஏற்பாட்டுக்குப் பின்னர், ஈ.பி.டி.பியின் அலுவலங்களில் மக்கள் தமது பயண ஏற்பாடுகளுக்கான முன் பதிவுகளை மேற்கொள்வதற்காகவும், தொலைபேசியில் உறவுகளுடன் உரையாடுவதற்காகவும் தினந்தோறும் நிறைந்து காணப்படுவது வழக்கமாகியிருந்தது.

தூரப்பிதேசங்களிலிருந்தும், அண்டைய தீவுகளான, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, புங்குடுதீவு, காரை நகர் போன்ற பகுதிகளிலிருந்து வருகின்றவர்களுக்கு உணவுகளை வழங்குவதும், தேவையானபோது தங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுமே முக்கிய பணிகளாக இருந்தது.

ஊர்காவல்துறையில் நிலை கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மண்டை தீவுக்குச் சென்றார். அங்கேதான் தீவகப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து செல்வதற்காக சென்று பண்ணைப் பாலத்தை புலிகள் இயக்கம் தகர்த்துவிட்டதால் யாழ்ப்பாணத்திற்குச் செல்ல முடியாமல் அநேகமானவர்கள் மண்டைதீவிலேயே தஞ்சமடைந்திருந்தார்கள்.

12990903_1536468629982896_1591383177947699556_n

அந்த மக்களை பார்வையிட்டு அவர்களில் மீண்டும் சொந்த வாழ்விடம் திரும்புவதற்கு விரும்பியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஏற்பாடுகளை செய்ததோடு, ஏனையவர்களுக்கு நிவாரணப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளையும், கடற்படையினரோடும், இராணுவத்தினரோடும், அரச அதிகாரிகளோடும் கலந்துரையாடி பெற்றுக் கொடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, ஊர்கால்துறைக்கு அன்மைய தீவுகளான நயினாதீவு, அனைலைதீவு, எழுவைதீவு, புங்குடுதீவு, காரைநகர் போன்றபகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தந்து டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது தேவைகள், குறைபாடுகளை தீர்துக் கொண்டும், பெற்றுக் கொண்டும் தமது இயல்பு வாழ்வுக்குத் திருப்பிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறான பொழுதொன்றிலேயே நயினாதீவக்குச் சென்று மக்களின் தேவைகளை ஆராய்ந்து கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நெடுந்தீவிலிருந்து மக்கள் அனுப்பியிருந்த மனிதாபிமானக் கோரிக்கை வந்து சேர்ந்தது.

அந்தக் கோரிக்கையை நெடுந்தீவு புலவர் அரியநாயகம் அவர்களின் தலைமையில் ஐந்துபேர் கொண்டுவந்திருந்தார்கள்.

அந்த கோரிக்கையில் நெடுந்தீவில் தாம் தவித்தும், தனித்தும் கிடப்பதாகவும், உணவுப் பொருட்களுக்கும், மருந்துப் பொருட்களுக்கும், அத்தியாவசியப் பொருட்களுக்கும் பெருந்தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் பல்வேறு நெருக்கடிகளுக்கும், சுகாதாரப் பிரச்சனைகளுக்கும் முகம்கொடுத்தபடி மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

நெடுந்தீவு மக்களின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யவும் உடனடியாக நெடுந்தீவுக்குச் செல்லவேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது தோழர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்தச் செய்தியை அறிந்த கடற்படையினரோ, நெடுந்தீவில் பாதுகாப்பு பிரச்சனை இருக்கலாம் என்றும், அதை உறுதி செய்யும்வரை பயணத்தை தாமதப்படுத்துமாறும் கூறியிருந்தார்கள்.

ஆனால் டக்ளஸ் தேவானந்தா அவர்களோ, பாதுகாப்புக் காரணங்களை பார்த்துக் கொண்டு தனது பயணத்தை தாமதிக்க முடியாது என்றும் உடனடியாகவே தனது தோழர்களுடன் புறப்படப்போவதாகவும் கூறியதோடு, கடற்படையினரதோ, இராணுவத்தினதோ பாதுகாப்பு எதுவும் இல்லாமலே தனது தோழர்களுடன் நெடுந்தீவுக்கு பயணமானார்.

இந்தப் பயணம் 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அமைந்தது. அங்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த மக்களை மீட்டெடுத்து நெடுந்தீவு மத்திய கல்லூரியில் அணிதிரட்டி அவர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அன்றைய தினம் கிறிஸ்மஸ் பண்டிகை என்பதால் தம்மை துயரத்தில் இருந்து மீட்பதற்காக தேவானந்தா அவர்கள் தேவ தூதனாகவே நெடுந்தீவுக்கு வருகை தந்திருப்பதாகவும், தேவன் நெடுந்தீவில் தமக்காக பிறந்துவிட்டதாகவும் ஆரவாரம் செய்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.

அந்த மக்களை ஆறுதல் கூறி அரவணைத்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அந்த மக்களுக்காக எடுத்துச் சென்றிருந்த உணவுப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் பங்கிட்டு வழங்க தன்னுடன் வருகை தந்திருந்த தோழர்களுக்கு உத்தரவிட்டதோடு, அன்றைய ஜனாதிபதி பிறேமதாசாவுடன் தொடர்பு கொண்டு நெடுந்தீவு மக்களுக்கு ஆறு மாதத்துக்குத் தேவையான நிவாரணப் பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் கப்பல் மூலம் அனுப்பிவைக்குமாறும் கேட்டிருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி பிறேமதாசா உடனடியாhகவே தேவையான பொருட்களை அனுப்பி வைத்திருந்தார்.

நெடுந்தீவில் பெரும்பாலும் கடற்றொழிலையே நம்பி மக்கள் வாழ்கின்றவர்கள். ஆனால் அன்றைய பொழுதில் தொழில்களுக்கே செல்வதற்கு உபகரணங்கள் இல்லாமல் இருந்தனர்.

அந்த நிலையில், நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட சுமார் இருபத்தி ஐந்து இந்திய மீனவர்களின் படகுகளை வழி மறித்து மீன்களை எடுத்துவந்து நெடுந்தீவு மக்களுக்கு பகிர்ந்தளித்த டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாட்டை நெடுந்தீவு மக்கள் பாராட்டினார்கள்.

அத்தோடு நின்றுவிடாமல் நெடுந்தீவு மக்களின் பிரச்சனைகள் தேவைகளை கேட்டறிவதற்காக அன்று இரவு நெடுந்தீவிலேயே தங்கியிருப்பதாகவும் கூறிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நெடுந்தீவு இறங்குதுறையிலேயே தங்கியிருந்தார்.

அங்கு தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் பெருமளவான மக்களும் தங்கியிருந்தார்கள்.

(தொடரும்)

Related posts: