9ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் அரச மருத்துவர்கள்

Sunday, May 7th, 2017

சைட்ம்(SAITM) எனப்படும் தெற்காசிய தொழில்நுட்ப மருத்துவ நிறுவனத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் நடத்தபட்ட வேலைநிறுத்தப் போராட்டம்  வெற்றியளித்துள்ளதாக  அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரவித்த  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் நவீன் டி சொய்சா, சய்ரம் தொடர்பில் இன்னமும்  நான்கு நாட்களில் அரசாங்கம் இறுதி முடிவொன்றை எடுக்கத் தவறினால் நமது போராட்டம்  இன்னும் கடுமையானதாக இருக்கும் எனவும் தெரவித்தார்.

 மே 9 ம் திகதி இடம் பெறும் எமது  மத்திய பணிப்புகுழுக்  கூட்டதில்  எதிர்காலத்தில்  முன்னேடுக்கப்படவுள்ள போராட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப் பட்டு முடிவு எடுகப்படும் எனவும் அது ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவதற்கான முடிவாகத்தான்  இருக்கும் எனவும்  அவர் தெரிவித்தார்.

நாட்டின்  தலைவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை மிரட்ட முயல்வதாகவும்  குற்றம் சுமத்திய நவீன் டி சொய்சா மாணவர்கள், மேலும் பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் எம்முடன் கை கோர்த்துள்ளன எனவும் தெரவித்தார்.

அரசாங்கம் SAITM  நிறுவனத்திற்கு அனுமதிக்க அளிக்க முடிவு செய்தால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது அணைத்து சக்தியையும் பயன் படுத்தி அதற்கு எதிராக அனைத்தையும் செய்வதற்கு தயாராகவே உள்ளது எனவும் அவர் தெரவித்தார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் மாலை வேளைகளில் தனியார் மருத்துவ மனைகளில்  பணியாற்றுகிறார்  என ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுகிறதே என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  டாக்டர் நவீன் டி சொய்சா எமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் இந்த  நடைமுறையில் ஈடுபடாமல் கோரப்பட்டுள்ளனர் எனவும் அவர்களுக்கு இது ஒரு கட்டாயத் தேவை இல்லை எனவும் பதில் அளித்தார்.

Related posts: