75 ஆயிரம் ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.- ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர்!

Thursday, December 7th, 2017

ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் தொழிநுட்பத்திலான தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணியில் இதுவரை 75 ஆயிரம் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அடையாள அட்டையை பெற்று கொள்வது தொடர்பில் மக்கள் ஆர்வத்துடன் இருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 1500 பேருக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  15 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை கோருவோருக்கும் தமது தேசிய அடையாள அட்டை சீர்குலைந்து காணாமல் போனோர் உள்ளிட்டோருக்கு இந்த ஸ்மாட் தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை கடந்த ஓக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம் பெற்றவுள்ளதால் தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் 3 மொழிகளிலும் தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான விண்ணப்பதாரர்களின் புகைப்படம் உரிய தரம் தொடர்பான பிரிவின் சிபாரிசுக்கு அமைவாகவே இது பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இதேவேளை எதிர்வரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையில் சம்பந்தப்பட்டவர்களின் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்படுகின்றது.

இதற்கு வசதியாக சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் - அமைச்சர் ...
வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நிறுவனத்திடம் இருந்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை - நாட்டின...
வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை -...

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்துடன் 41 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு - இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க...
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார ...
மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர - உலக வங்கி அதிகாரிகள் இடையே ...