7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட 13 பாடசாலைகள் அபிவிருத்தி !

Friday, May 18th, 2018

கிளிநொச்சி மாவட்டத்தின் 13 பாடசாலைகள் தென்கொரியாவின் கொய்கா அபிவிருத்தி செயல்திட்டத்தின் மூலம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

குறித்த திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகளாக பளை, கண்டாவளை, கராச்சி, பூநகரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த கிளிநொச்சி இந்துஆரம்ப பாடசாலை பிரமந்தநாறு மகா வித்தியாலயம் இயக்கச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முழங்காவில் ஆரம்ப வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகள் மாதிரி பாடசாலைகளாகவும், சென்.தெரேசா பெண்கள் கல்லூரி, கனகாம்பிகை குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சிவாபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன்பாடசாலை இராமநாதபுரம் (கிழக்கு) அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பளை இந்து ஆரம்ப பாடசாலை சோரன்பட்டு இலங்கை கிறிஸ்தவ தமிழ் கலவன் பாடசாலை, முக்கம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைநு கரையாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இரணைதீவு ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை ஆகிய ஒன்பது பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதன் போது பாடசாலை கட்டிடங்கள்நு விசேட தேவை உடையோருக்கான வகுப்பு உபகரணங்கள்நு ஆசிரியர்கள்நு அதிபர்கள்நு ஆசிரிய ஆலோசகர்கள்நு கல்வி பணிப்பாளர்கள்ஆகியோருக்கான வெளிநாட்டு உள்நாட்டு பயிற்சிகள்நு மாணர்களுக்கான தொழில் வழிகாட்டல் கணனி தொழில்நுட்பம் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுஅபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு கல்வி இயல் அளவை மேம்படுத்தும் செயல் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள்நு பணிப்பாளர்கள் உள்ளிட்ட தென்கொரிய நாட்டின் கொய்கா நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts: