270 கோடி ரூபா செலவில் இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டம்!

Saturday, March 24th, 2018

இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு ஐரோப்பிய ஒன்றியம் ஜேர்மன் அரசாங்கம்ஆகியவற்றின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.

270 கோடி ரூபா செலவில் அமுலாக்கப்படும் இந்த திட்டத்தை  சகவாழ்வு தேசிய கலந்துரையாடல் அரச கரும மொழிகள் தொடர்பான அமைச்சும்தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க அலுவலகமும் நடைமுறைப்படுத்த உள்ளன.

தேசிய நல்லிணக்க நடைமுறையின் முன்னேற்றத்தை அறிக்கையிடுதல் நான்காண்டுகாலத் திட்டத்தின் நோக்கம் என ஜனாதிபதியின் செயலாளர்ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றரை இலட்சம் பேரை அடையக்கூடியவாறு 35 ஸ்தானங்களில் நடமாடும் அரும்பொருள் காட்சியகங்களும்அரங்குகளும் நிர்மாணிக்கப்பட உள்ளன. பொலிஸ் திணைக்களம் நீதித்துறை சுகாதாரத்துறை ஆகியவற்றைச் சார்ந்த 1200 பேருக்கு மொழிப் பயிற்சிஅளிக்கப்படும்.

Related posts: