2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் – எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தகவல்!
Thursday, March 23rd, 2023
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, நவம்பர் மாதம் 19ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
10 அணிகள் பங்கேற்கும் 48 போட்டிகள் கொண்ட இப்போட்டித் தொடர் 46 நாட்களில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டிகள் Ahmedabad, Bengaluru, Chennai, Delhi, Dharamsala, Guwahati, Hyderabad, Kolkata, Lucknow, Indore, Rajkot, Mumbai மைதானங்களில் நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
அந்த ஆதாரங்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கையில், போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், இது தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


