10 ஆண்டு கொள்ளையை விஞ்சிய இரண்டு ஆண்டுகளின் கொள்ளை!

Sunday, May 7th, 2017

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 10 வருட காலப்பகுதியில்  அவரும் அவரது குடும்பத்தவரும் மேற்கொண்ட ஊழல்களினால் கொள்ளையடிக்கப்பட்ட  அரச பணத்தை விட அதிக அளவிலான பொது நிதியினை பதவிக்கு வந்த  இரண்டே ஆண்டுகளினுள்  இந்த  நல்லாட்சி அரசாங்கம்  கொள்ளையடித்துள்ளதாக பொது நிறுவனங்களின் குழுத் தலைவரும், ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெட்டி தெரவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும்  ஸ்ரீ.லங்கா சுதந்திர கட்சிக்கும் ஒரு மாற்று தேவைப் படுகிறது என்பதை இந்த நாட்டிலுள்ள வாக்களர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரவித்தார். Ceylon Today பத்திரிகைக்கு வழங்கிய நீண்ட செவ்வி ஒன்றில் இந்தக் கருத்துக்களை வெளியிட்ட  சுனில் ஹந்துன்னெட்டி முற்றிலும் மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்ட சக்திகளின் தேவையை மக்கள் சிறிது சிறிதாக உணர்ந்து வருவதாகவும் அப்படியான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரவித்தார்.

இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பிலான கேள்வி ஒன்றிற்கு  பதில் அளிக்கையில் அவர்கள் முன் வைக்கும் தீர்வுத் திட்டமானது அதை பெறும் விதத்தில் இருக்க வேண்டும் எனவும் மீண்டும் ஒரு போர் சூழலுக்கு இந்த நாட்டை இழுத்துச் செல்லும் விதத்தில் அமையக் கூடாது எனப் பதில் அளித்தார்.

Related posts: