வேட்பாளர் அடையாள அட்டை அவசியம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
Friday, December 29th, 2017
ஊள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பாளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று புதன்கிழமை உள்ளு+ராட்சி தேர்தல் தொடர்பில் கட்சி செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய சந்தித்து பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு செல்வதற்கும் பார்வையிடுவதற்கும் வசதியாக வேட்பாளர் அடையாள அட்டையை வழங்கவுள்ளோம். இதற்கு வேட்பாளர்கள் விண்ணப்பிப்பது அவசியம். மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் அலுவலகத்தில் விண்ணப்பத்தை வேட்பாளர்கள் பெற்று அதனை பூர்த்தி செய்து கையளிப்பதன் மூலம் வேட்பாளர் அடையாள அட்டையை பெற முடியும் என்றார்.
Related posts:
|
|
|


