வெப்பத்தைத் தணிக்க அதிகளவு தண்ணீர் அருந்துங்கள் – சுகாதார அமைச்சு வலியுறுத்து!

Sunday, April 29th, 2018

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையால் ஏற்படும் உடற்பாதிப்புக்களை தவிர்க்கும் முகமாகவும் உடல் வெப்பத்தைத் தணிக்கும் வகையிலும் அதிகளவு தண்ணீரை அருந்துமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கடும் வெப்பநிலை நிலவுகின்றது. 33 பாகை செல்சியஸ் ஆக வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு நீரிழப்பால் மயக்கம் மற்றும் நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவற்றைத் தடுக்க அதிகளவு குடிதண்ணீரை அருந்த வேண்டும். அத்துடன் இயன்றளவு பப்பாசி, வெள்ளரி போன்ற பழ வகைகள் இளநீர் போன்றவற்றை உண்ணுமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts: